மகளிர்மணி

பிரண்டைப் பொடி 

20th Oct 2021 06:00 AM |  - கவிதா பாலாஜிகணேஷ்

ADVERTISEMENT

 

பிரண்டை அடிக்கடி கிடைக்காதவர்கள், அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிரண்டையைப் பொடியாக்கி வைத்துகொண்டால் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

தேவையானவை:

பிரண்டை - 3 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம்
கடலை பருப்பு - அரை கிண்ணம்
வரமிளகாய் - 1 கைப்பிடி 
கருப்பு எள்ளு - 5 தேக்கரண்டி
பெருங்காயம் கட்டியாக - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
மிளகு - 2 தேக்கரண்டி

ADVERTISEMENT

செய்முறை: 

பிரண்டையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து தட்டி கொட்டி ஆறவிடுங்கள். அனைத்தையும் தனித்தனியாக வாணலியில் வறுத்து வைத்து கொள்ளுங்கள். தட்டில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். முதலில் பிரண்டையை அரைத்து பிறகு மற்ற பொருள்களை சேர்த்து அரைக்கவும்.

இந்தப் பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்து அவ்வப்போது பயன்படுத்துங்கள். இது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். உதிரான சாதத்தில் பொடியை கலந்து சாப்பிடலாம். எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags : magaliarmani பிரண்டைப் பொடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT