மகளிர்மணி

பிரண்டைக் காரக்குழம்பு 

20th Oct 2021 06:00 AM |  - கவிதா பாலாஜிகணேஷ்

ADVERTISEMENT

 

தேவையானவை:

பிரண்டை பொடியாக நறுக்கியது - 1கிண்ணம்
சாம்பார் வெங்காயம்- அரை கிண்ணம்
பூண்டு பல் - ஒரு கைப்பிடி
தக்காளி - 2
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வடகம் - தாளிப்புக்கேற்ப
கடுகு, சீரகம், வெந்தயம்- தாளிப்புக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - கால் கிண்ணம்

செய்முறை: 

ADVERTISEMENT

அடிகனமான சட்டியில் நல்லெண்ணெய் விட்டு வடகம், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய பிரண்டைத் துண்டுகளை சேர்த்து வதக்கிவிடவும். எல்லாம் சேர்ந்து நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல் விட்டு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கலந்து மேலும் சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி விடவும். அருமையான பிரண்டைக் காரக்குழம்பு தயார். 

(குறிப்பு: பிரண்டையை வாங்கும் போது பிஞ்சான பிரண்டைகளை வாங்கி கொள்ளுங்கள். பிரண்டை தண்டுகளின் ஓரங்களில் இருக்கும் நாரை மட்டும் சுத்தம் செய்யுங்கள். நார் நீக்கிய பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

பிரண்டையை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் விரலில் தடவி கொள்வது நல்லது. (அப்போதுதான் கை அரிக்காமல் இருக்கும். அல்லது கை கிளவுஸ் அணிந்து கொண்டும் பிரண்டையை நறுக்கலாம்).

Tags : magaliarmani பிரண்டைக் காரக்குழம்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT