மகளிர்மணி

கொலு டிப்ஸ்..

தினமணி



பழைய குக்கர் கேஸ்கட்டை வைத்து அதனுள் மண்தூவி புல்தரை அமைத்து பூங்கா, மிருகக்காட்சி சாலை அமைக்கலாம்.

கொலுவில் அமைக்கும் குளத்து நீரில் ஒரு சில சொட்டுகள் நீலம் விட்டு கலந்து அதில் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற பொடி சமிக்கிகளை மூழ்க விட்டால் மெல்லிய விளக்கு வெளிச்சத்தால் பார்த்தால் பிருந்தாவனம் போல மின்னும்.

களிமண்ணை ஆற்று மணலுடன் கலந்து சிறிது நீர் தெளித்து பிசைந்து ஓர் அடி உயரம் மேடும் பள்ளமுமாக மலை போல செய்து அதில் உயரமான இடங்களில் சிறிய யானை, கரடி, புலி போன்ற பொம்மைகளை நிறுத்தி வைக்க வேண்டும். மற்ற இடங்களில் கேழ்வரகு தூவ வேண்டும். நான்கு நாட்களில் கேழ்வரகு முளைத்து பச்சை பசேல் என்று காட்டுக்குள் மிருகங்கள் இருப்பது போல தோன்றும்.

பிளாஸ்டிக் ரிங் வாங்கி அதன்மேல் ஒரு மண்டபம் போல் அமைத்து குளம் செய்து விட்டால் தெப்பம் போல் மிதக்கும்.

புல் தரைகளுக்கு உமியில் பச்சை சாயத்தை நன்கு புரட்டி ஈரமண் மீது நெருக்கமாக தூவிவிட்டால் நிஜ புல்தரை போல பார்க்க நன்றாக இருக்கும்.

பார்க் நடுவில் குளம் அமைத்து அதில் ரோஜா அல்லது செம்பருத்தி அல்லது தாமரை ஒன்றை நட்ட நடுவில் மிதக்க விடுங்கள். கூடவே வட்ட வட்ட இலைகள் சின்னஞ்சிறு இலைகளை மிதக்க விடுங்கள். அழகாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT