மகளிர்மணி

பச்சைப்பட்டாணி சுண்டல்

ஏ. காந்தி

தேவையானவை: 

பச்சைப் பட்டாணி - 1 கிண்ணம்
கேரட் துருவல் - 3 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
மேலே தூவுவதற்கு:
 நறுக்கிய மல்லித்தழை - 2 தேக்கரண்டி

செய்முறை: 

பச்சைப் பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 2  தேக்கரண்டி,  எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மல்லித்தழை தூவி கலந்துவிடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி அசத்தல்: கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

SCROLL FOR NEXT