தேவையானவை:
வெள்ளை காராமணி - கால் கிண்ணம்
வேர்க்கடலை - அரை கிண்ணம்
இனிப்புச்சோளம் - கால் கிண்ணம்
(உதிர்த்தது)
தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க:
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
வரமிளகாய் - 3
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
செய்முறை:
காராமணி, வேர்க்கடலை இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேகவிட்டு தனியே வைக்கவும். உதிர்த்த இனிப்புச் சோளத்தை சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட்டுத் தனியே வைக்கவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த காராமணி, வேர்க்கடலை, சோளம் இவற்றைச் சேர்த்து வதக்கி பொடித்த பொடியினைத்தூவி, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.