மகளிர்மணி

போக்சோ: விழிப்புணர்வு அவசியம்!  

பொ. ஜெயசந்திரன்


மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர், போக்சோ சட்டம் குறித்து 'ரக்ஷா' என்ற பெயரில் விழிப்புணர்வு பயிற்சி திட்டத்தை உருவாக்கியவர், தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்கு பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டு பாலியல் துன்புறுத்தல் சார்ந்த பிரச்னைகளை எடுத்துரைப்பவர், முனைவர் சரண்யா ஜெய்குமார். தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டியது? 

சமூகத்தில் வாழ்வதற்கான வாழ்க்கை பயணத்தின் பல மைல் கற்களை தாய்- தந்தையும் சேர்ந்து ஏற்படுத்தி தருகின்றனர். குழந்தைகளை, குழந்தைகளாக இருக்க விட்டாலே போதும். மிக முக்கியம் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளைத் தெரிந்து கொண்டு, சரியான முறையில் அத்தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது. 

குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டியது. ஒன்று லட்சியம். மற்றொன்று குறிக்கோள். அந்த குறிக்கோளை அடைவதற்கு திட்டமிடுதல் அவசியம். நான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஆகவேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் அது கனவு மட்டுமாகத்தான் இருக்கும். அதை எப்படி வெற்றிகரமாக நிறைவேற்ற போகிறோம் என்ற திட்டமிடுதல் இருந்தால் தான் அது நிஜமாக மாறும். 

இரண்டாவது நம்முடைய குழந்தை தனது நண்பர் மூலமாகவோ அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ ஏதோ ஒரு வகையில் தீய பழக்கங்களுக்கு ஆளாகும் போது பெற்றோர் அதை கண்டித்தால் உடனே அந்த இடத்தில் பிடிவாதம் குழந்தைகளுக்கு அதிகமாகும். இந்த நேரத்தில்தான் நம்முடைய அன்பால் சாதிக்க வேண்டும். அப்படி சாதித்து விடுவதில் தான் உங்களுக்கான மகிழ்ச்சியும் குழந்தைகளுக்கான வெற்றியும் அடங்கியுள்ளது. 

நீங்கள் வழங்கும் விழிப்புணர்வு பயிற்சிகள் குறித்து?

கடந்த 2012-ஆம் ஆண்டு நான் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அச்சமயத்தில் அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம்  குழந்தைகளுக்கு பல தரப்பட்ட பிரச்னைகள் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இதனால் "ரக்ஷா' என்ற பெயரில் விழிப்புணர்வு பயிற்சிகளை தொடங்கினேன். 

தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 650-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து பல்வேறு பயிற்சிகள் வழங்கியுள்ளேன். இதில் பெண் குழந்தைகளுக்கு நிகழ்கால முக்கியத்துவம், பெண் கல்வி, திறன் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்தியுள்ளேன். 

போக்சோவைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறதா?

இந்த போக்சோ சட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வந்திருந்தாலும். கடந்த 6 மாத காலமாக மக்கள் மத்தியில் இதைப்பற்றிய விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது. போக்சோவை பொறுத்தவரைக்கும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் அந்த குற்றத்தை புரிந்தவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த சட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இவர் என்னிடம் தப்பாக நடந்து விட்டார் ஆனால் அதற்கு ஆதாரமாக எந்த புகைப்படமோ, விடியோவோ, ஆடியோவோ எதுவுமே என்னிடம் இல்லை என்று பாதிக்கப்பட்ட குழந்தையும் அவர்களுடைய பெற்றோரும் எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். குழந்தையின் வாக்கு மூலத்தை வைத்தே கூட வழக்கு தொடரலாம். 

சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், சீண்டல்கள் அதிகரித்துக் கொண்டு இருந்த காரணமாக சட்டத்திருத்தம் செய்யப்பட்டு அதன் மூலம் 12-வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவருக்கு போக்சோவில் அதிக பட்சமான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.  

பள்ளிக் கல்விதுறையால் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் இந்த ஆண்டு ஜுன் மாதம் மாணவர் பாதுகாப்பு குழு என்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர் யாரிடமாவது குழந்தை தனக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளிப்படுத்தினால் அதற்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT