மகளிர்மணி

பட்டாணி சூப் செய்ய...

சீதாலெட்சுமி

மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடியாக்கும்போது, சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு தூளாகிவிடும்.

தோசை வார்க்கத் துவங்கும்போது முதலில் கொஞ்சம் பெருங்காயத்தூளை கல்லின் மேல் பரவலாகத் தூவி துடைத்துவிடுங்கள். பிறகு மாவை ஊற்றினால், வட்டமான மொறுமொறு தோசைகள் கல்லில் ஒட்டாமல் சுலபமாக எடுக்க வரும்.

எலுமிச்சைச் சாதம் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் எலுமிச்சைப் பழத்தை வெந்நீரில் போட்டு வைத்து அதன்பின் சாறுப் பிழிந்தால் அதிக அளவு சாறு கிடைக்கும். நான்கு பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவான, சுவையான சாப்பாத்தி ரெடி.

பாகற்காயை நறுக்கி உப்பு, தயிர் சேர்த்து நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நன்றாகப் பிழிய வேண்டும் அதன்பிறகு பொரியல் செய்தால் பாகற்காயின் கசப்பே தெரியாது.

காய், கூட்டு எல்லாம் மிஞ்சிப் போனால் அவற்றை ஒன்றாகக் கலந்து, கெட்டியாக புளி கரைத்துச் சேர்த்து சிறிது காரத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். சுவையான பொரித்த குழம்பு தயார்.

மிகுந்துவிட்ட தேங்காய்ச் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் தோசை மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும்.

பொரித்த அப்பளங்கள் மூன்றை பொடியாக்கி தேவைக்கு ஏற்றாற்போல் துருவிய தேங்காய், புளி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் சுவையுடன் துவையல் ரெடி.

பட்டாணி சூப் செய்யும்போது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடி செய்து அதில் சேர்த்துக் கொதிக்க வைத்தால் கெட்டியான சூப் தயார்.

கோஸைப் பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்து எடுத்து, தயிரில் போட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிய இஞ்சி, சிறிது கறிவேப்பிலை போட்டுத் தாளித்து எடுக்க சுவையான கோஸ் தயிர் பச்சடி தயார்.

சப்பாத்திக்கு அல்லது பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக சாதம் வடித்த கஞ்சியைச் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

ஆப்பத்துக்கு மாவு கலக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்க ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.

பைனாப்பிளை வெட்டிய பிறகு அதன் நடுவில் இருக்கும் தடித்த பகுதியை வெட்டி எறியாமல் குழம்பு ரசத்திற்குப் போட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

புளியோதரையில் ருசி அதிகரிக்க சிறிது தோல்நீக்கிய வறுத்த கடலைப் பருப்பைப் பொடித்துச் சேர்த்து சிறிது வெல்லமும் போட்டால் சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT