மகளிர்மணி

பிரெட்  ஃபிங்கர்ஸ் 

24th Nov 2021 06:00 AM | லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.

ADVERTISEMENT

 

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 5
சோள மாவு - 3 மேசைக்கரண்டி
சீரகப்பொடி - கால் தேக்கரண்டி
சாட் மசாலா - இரண்டு சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ADVERTISEMENT

ஓரம் நீக்கிய பிரெட் துண்டுகளைத் தண்ணீரில் போட்டுப் பிழிந்து கொள்ளுங்கள். இதனுடன் சோள மாவு. மிளகாய்த் தூள், சீரகப் பொடி , உப்பு, சாட் மசாலா சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். 15 நிமிடம் கழித்து, நீளமாக உருட்டி ஓரங்களைக் கத்தியால் வெட்டினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதனை மிதமான தீயில் பொரித்தெடுக்க வேண்டும். மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் எண்ணெய்யில் போட்டெடுக்க முடியாது. அதற்குத் தகுந்தாற்போல் சோளமாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பிரெட் கிரம்ஸ் இருந்தால் அதிலும் பிரட்டி எண்ணெய்யில் போடலாம்.

Tags : magaliarmani
ADVERTISEMENT
ADVERTISEMENT