மகளிர்மணி

பிரெட் ரசமலாய் 

24th Nov 2021 06:00 AM | லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.

ADVERTISEMENT

 

தேவையானவை:

பிரெட் - 4
பால் - 2 கிண்ணம்
நெய் - 1 தேக்கரண்டி
கன்டென்ஸ்டு மில்க் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - கால் கிண்ணம்
பொடித்த மிக்ஸட் நட்ஸ்
(பிஸ்தா, முந்திரி, பாதாம்) - 2 மேசைக்கரண்டி
குங்குமப் பூ - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை:

ADVERTISEMENT

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய்த் தடவி, கன்டென்ஸ்டு மில்கையும், பாலையும் ஊற்றவும். பால் கொதித்தவுடன் மிதமான தீயில் வைக்கவும். பின்னர், கைவிடாமல் கிளறவும். பால் கெட்டியாகி பாதியாகச் சுண்டும் வரை கிளறவும். இதற்கிடையில் 2 தேக்கரண்டி வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது கொதிக்கும் பாலில் சர்க்கரை, குங்குமப்பூ பாலைச் சேர்த்து, கைவிடாமல் கிளறவும். இதன் பெயர் ராப்ரி. அடுப்பை மிதமான தீயில் வைத்து பாதி அளவுக்குப் பால் சுண்டும் வரை வைத்திருக்கவும்.

நெய்யில் பருப்புகளை வறுத்து ராப்ரியுடன் நன்கு கலக்கவும். அத்துடன் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த ராப்ரி கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும். இதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இதற்கிடையே பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, ஒரு சிறு மூடியால் பிரெட்டை அழுத்தி சின்ன வட்டங்களாக வெட்டவும். பரிமாறும்போது ஒரு கப்பில் ராப்ரி சேர்த்து இதில் பிரெட் துண்டுகளைப் போடவும். சுவையான பிரெட் ரசமலாய் ரெடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT