மகளிர்மணி

சப்பாத்தி மிருதுவாக இருக்க...

10th Nov 2021 06:00 AM | ஏ.எஸ்.கோவிந்தராஜன்

ADVERTISEMENT


பாலில் வேக வைத்து செய்ய கூடிய பாயசங்களை செய்யும்போது தீயை குறைத்து வேக வைக்க வேண்டும். இதனால் நாம் மறந்து வேறு வேலையாக இருந்தால் கூட தீய்ந்து போகாது. மிதமான தீயில் எரிவதால் சுவை அதிகமாக இருக்கும்.

மைதா மாவில் சர்க்கரை அல்லது பாகை ஊற்றி கலந்து தோசை சுட்டுக் கொடுக்கலாம்.

பனீர் தயார் செய்யும்போது, மீதம் ஆகும் நீரை சப்பாத்தி மாவில் பயன்படுத்தினால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

தேங்காய்த் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்ஃபி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

ADVERTISEMENT

முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, முள்ளங்கியை சிறிதளவு எண்ணெய்யில் வதக்கிய பின் சாம்பார் செய்தால் சுவையான சாம்பார் தயார். 

தக்காளி சூப் அதிகமான மணமாக இருக்க புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து அதனை தக்காளி சூப்புடன் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.

பச்சை கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

கேரட், பீட்ரூட் வாடிப் போனால் அதை நறுக்குவது கடினமாக இருக்கும். அதை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது போன்று ஆகி விடும். வெட்டவும் எளிதாக வரும்.

தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்து விடும்.

மைதாவை நீர் விட்டுப் பிசையாமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து உப்பும், நெய்யும் சேர்த்து பிசைந்து முறுக்கு செய்தால் சுவையாக இருக்கும். 

கொண்டைக்கடலையை நிறைய ஊறவைத்து, பிறகு அதை வேகவைத்து பிரீஸரில் வைத்தால் சுண்டல், பூரிக்கு சென்னா, சாலட் போன்றவை தயாரிக்க எளிதாக இருக்கும்.

வெந்தயத்தை வறுத்து சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

இட்லி சுடும்போது மாவில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். 

மோர்க் குழம்பை வடிகட்டி அதனுடன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சோடா மாவு சேர்த்து இரவு வைத்துவிட்டு காலையில் ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும்.

சாம்பார் அல்லது ரசம் மீந்துவிட்டால், அதனை வடிகட்டி, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT