மகளிர்மணி

வல்லாரை வடை

10th Nov 2021 06:00 AM | எம்.எஸ். வாணி லட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை:

வல்லாரை - 1 சிறுகட்டு
துவரம் பருப்பு  - கால் கிண்ணம்
பாசிபருப்பு  -  கால் கிண்ணம்
கடலைப் பருப்பு  - கால் கிண்ணம்
சோம்பு  -  கால்  தேக்கரண்டி
வெங்காயம்  -  1
தேங்காய்த் துருவல்  - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
 வரமிளகாய் - 1
இஞ்சி -  1சிறு துண்டு
உப்பு  - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை:  

ADVERTISEMENT

வல்லாரைக் கீரையை  ஆய்ந்து  கழுவி  வைக்கவும்.  துவரம்பருப்பு, பாசி பருப்பு, கடலைப் பருப்பைக்  கழுவி  2  மணி நேரம்  ஊற வைக்கவும். ஊறியதும்  நீரை வடித்து  வைக்கவும்.  மிக்ஸியில்  பச்சைமிளகாய்,  வரமிளகாய்,  சோம்பு, உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்து  அதில் பருப்பு வகைகளை  நீர் இல்லாமல்  போட்டு கொரகொரப்பாக  அரைத்து  எடுக்கவும்.  வல்லாரையை  அதில்  சேர்த்து பிசைந்து  எண்ணெய்யைக் காயவைத்து வடைகளாக சுட்டு எடுக்கவும். இஞ்சிச் சட்னியுடன்  பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT