மகளிர்மணி

முடக்கற்றான்  ஊத்தப்பம்

10th Nov 2021 06:00 AM | எம்.எஸ். வாணி லட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை:

முடக்கற்றான் - 1 கட்டு
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

ADVERTISEMENT

முடக்கற்றான் இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். புழுங்கல் அரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், புழுங்கல் அரிசியை நைசாக அரைக்கவும். முடக்கற்றானையும் சேர்த்து அரைத்துச் சேர்க்கவும். வெங்காயத்தையும் உப்பையும் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி ஊத்தப்பங்களாக வார்க்கவும். மூடி போட்டு வேகவைத்து திருப்பிவிட்டு சில துளி எண்ணெய் தெளித்து வெந்ததும் எடுக்கவும். பூண்டுச் சட்னியுடன் பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT