மகளிர்மணி

கத்தரிக்காய் காரக்கூட்டு 

10th Nov 2021 06:00 AM | எம்.எஸ். வாணி லட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை:

கத்திரிக்காய்  - கால்கிலோ
முருங்கைக்காய் -2
தக்காளி - கால் கிலோ
மிளகாய்த் தூள்  - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் -  2 தேக்கரண்டி
மல்லித்தூள் - தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்  - 50 கிராம்
தாளிக்க:
கடுகு  - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து -  1தேக்கரண்டி
எண்ணெய்  - 50 மல்லி
காய்ந்தமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:   

ADVERTISEMENT

தக்காளிப்பழத்தை,  நீளவாக்கில்  நறுக்கி வைக்கவும்.  முருங்கைக்காயை நறுக்கி வைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு,  உப்பு  சேர்த்துக் கொஞ்சம்  தண்ணீர்விட்டு குழைவாய்  வேக வைக்கவும்.  மற்ற  தூள் வகையெல்லாம்  சேர்த்து கொதிக்கவிடவும்.  வெந்தபிறகு  தேங்காயை விழுதாக அரைத்து சேர்க்கவும்.  பின் கிளறிவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி,  கடுகு,  உளுந்தம்பருப்பு  சேர்த்து  சிவந்ததும்  பொடியாக  நறுக்கி, சின்ன  வெங்காயத்தைப் போட்டு,  வதக்கவும்,  பின்,  மிளகாய்  கறிவேப்பிலை சேர்த்து ஒரு  கிளறு, கிளறி கூட்டில் சேர்க்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT