மகளிர்மணி

கூந்தல் பராமரிப்பு

20th May 2021 04:34 PM

ADVERTISEMENT

• பூந்திக் கொட்டையை இரவில் கொதிக்கும் நீரில் போட்டு மூடிவைத்து காலையில் நன்றாகக் கசக்கினால் நல்ல நுரை வரும். அந்த நுரையை தலையில் தேய்த்து ஊறியபின் குளித்தால் தலையிலுள்ள அழுக்கெல்லாம் நீங்கி கூந்தல் பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.

• கசகசாவை ஊறவைத்து அரைத்து வாரம் இருமுறை தலையில் தேய்த்துக் குளித்து வர முடியின் செம்பட்டை நிறம் மாறும்.

• கறிவேப்பிலையை அரைத்து தினமும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.

• பொடுகுத் தொல்லையைப் போக்க மருதாணி இலையை அரைத்து தலையில் பூசி வந்தால் பொடுகுத் தொல்லை இருக்காது. முடி கொட்டுவது நின்றுவிடும்.

ADVERTISEMENT

• கசகசா, வால்மிளகு, தேங்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு, புண் ஆகியவை குணமாகும்.

• மாதுளை விதைகளை மைப்போல் அரைத்து வாரத்திற்கு ஒருமுறை தலையில் பூசி வந்தால் பேன் மறையும்.
- சி.ஆர்.ஹரிஹரன்

ADVERTISEMENT
ADVERTISEMENT