மகளிர்மணி

வியக்க வைத்த ஓவியங்களால் அசத்தியவர்

பொ. ஜெயசந்திரன்


குழந்தைகளுக்கு இலவச ஓவியக்கலை, அண்மையில் முகநூலில் இன்றைய இளம் தலைமுறையினர் படிக்கும் விதமாக வெளியான பொன்னியின் செல்வனுக்காக படங்கள் வரைந்தவர் தான் ஆர்.விஜயலட்சுமி இவரை சந்தித்துப் பேசியதிலிருந்து:

எனது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு. என்னுடைய அப்பா திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் புலவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர். அவருடைய பணி மாறுதல் காரணமாக புதுக்கோட்டை வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விவரம் தெரியாத வயதில் இருந்தே வரைய ஆரம்பித்து விட்டேன் அம்மா ஸ்லேட்டில் யானையும், தாமரையும் வரைந்து தர நான் வரைந்த முதல் படங்கள் அவை. பள்ளிப்பிடிப்பின் போதே அரசு தேர்வில் ஓவியம் வரைந்தேன்.

என்னுடைய கல்லூரி நாள்களில் புதுக்கோட்டையில் காலண்டரில் தெய்வ படங்கள் வரைந்து வந்த மிகப்பெரிய ஒவியர் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. கல்லூரி நேரம் போக மீதி நேரம் அவர் ஓவியக் கூடத்தில் என்னுடைய முழு நேரம் கழிந்தது.

அவரின் மூலமாக புகழ்பெற்ற ஓவியர் மாருதி அறிமுகமும், ஓவியர் மணியம் செல்வன் அறிமுகமும் கிடைத்தது. இதனால் ஒவியத்தில் ஆர்வம் அதிகமானது. இதன் தொடர்ச்சியாக பொன்னமராவதி பகுதியில் ஸ்ரீராகவேந்திரா பள்ளி, கணினி மையம், இலவச பிரைமரி ஆசிரியர் பயிற்சி, அஜந்தா அழகு நிலையம், அஜந்தா நடனாலயா நாட்டியப்பள்ளி இது போன்ற வற்றை நடத்தி வந்தேன்.

இதன் மூலமாக இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புற குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைந்த கல்வியும், ஓவியப்பள்ளியில், ஓவியம் மற்றும் கைவினைப் பொருள்கள் செய்ய கட்டணமின்றி பயிற்சிகளும், கணவனை இழந்த மற்றும் பிரச்னைகளுடன் வரும் பெண்களுக்குக் மேற்படிப்பிற்கும், தொழில் சார்ந்த வருமானங்களுக்கு வழி வகுப்பது மொத்தத்தில் பெண்களுக்கு எந்த வித அமைப்பும் சாராமல் உதவி செய்கிறேன்.

என்னுடைய பயோகிராஃபி, "அந்திமழை" இதழில் வெளி வந்தது உடனே கல்கி ஆசிரியர் போன் செய்து ஓவியங்கள் பற்றி கேட்டு நடுப்பக்கத்தில் வெளியிட்டார்.

இன்றைய எழுத்துலகில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்றி நிறைய படைப்புகளை நமக்கு அள்ளி தரும் வரிசையில் சிங்கப்பூரில் கணினித்துறையில் இருக்கும் வெங்கடேஷ் வீரராகவன் என்பவர் கல்கியின்

"பொன்னியின் செல்வன்' என்ற காவியத்திற்கு இன்றைய தலைமுறைகள் படிக்கும் விதமாக முகநூலில் நான்கு அத்தியாயங்கள் ஒரு பகுதியாக தொகுத்து மொத்தம் 96பகுதிகளாக சென்ற ஆண்டு மேமாதம் தொடங்கி இப்போது முடித்திருக்கிறார்.

அதற்கு என்னை படம் வரைய சொல்லியிருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒரே மாதிரி கதையின் கடைசி வரை கொண்டு செல்வது மிகப்பெரிய சேலஞ்சாக இருந்தது.

என்னுடைய 25ஆண்டு கால பள்ளி உழைப்புக்கு பின் ஒய்வு நேரத்தில் சிறுகதைகள் எழுத தொடங்கி வார, மாத இதழ்களில் வெளிவந்த கதைகளை தொகுத்து "விளிம்பை தாண்டிய விழிகள்' என்ற தலைப்பில் 2018-இல் ஒரு சிறுகதை நூல் ஒன்று வெளியிட்டேன்.

அதன் பிறகு 50-க்கும் மேற்பட்ட கதைகள்,100கவிதைகள் இவற்றை கரோனா தாக்கம் முடிந்த பின்னர் வெளியிட எண்ணம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT