மகளிர்மணி

துணிக்கு நீலம் போடும் போது கவனிக்க வேண்டியவை!

ஆர். கீதா


வெள்ளைத் துணிக்கு நீலம் போடும்போது ஒரு தேக்கரண்டி கல் உப்பை நீரில் கரைத்து நீலம் போட்டால் சட்டையில் திட்டு திட்டாக நீலம் தேங்காது.

* காய்கறியை நறுக்கும் கட்டிங் போர்ட்டை சுத்தம் செய்ய எலுமிச்சையில் உப்பைத் தடவி போர்ட்டை நன்றாக தேய்க்கவும். சிறிது நேரத்தில் கரைகள் எல்லாம் அகன்றுவிடும்.

* பீங்கான் பாத்திரத்தில் கறை படிந்து உள்ளதா ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி நன்கு தேயுங்கள் கறைகள் அகன்றுவிடும்.

* காக்கி நிறம் மற்றும் நீலநிற சீருடைகளில் படியும் எண்ணெய்ப்பிசுக்கு நீங்க ஒரு ஷாம்பு பாக்கெட் எடுத்து சிறிதளவு நீரில் விட்டு நன்றாக நுரை வரும்படி அடித்து, எண்ணெய்க் கறை படிந்த துணிகளை ஒரு அரைமணி நேரம் ஊற வைத்து, எடுத்துப் பின் டிடர்ஜெண்ட் சோப் பயன்படுத்தித் துவைத்து அலசினால் எண்ணெய்க் கறைகள் தேடினாலும் கிடைக்காது.

* டெரிகாட்டன் சட்டைகளைத் துவைக்கும்போது அவற்றில் காலர் பகுதியில் கறைகள் இருந்தால் சோப்புத் தூளும், சர்க்கரையும் கலந்து தேய்த்தால் அதில் படிந்துள்ள கறைகள் சுலபமாக நீங்கிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT