மகளிர்மணி

மரங்களை பாதுகாக்கும் இளமங்கை!

ராஜன்

இன்றைய இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் சமூகத்தின் மீது அக்கறை உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார், திருச்சியைச் சேர்ந்த சிந்து(23). குறிப்பாக மரக்கன்று நடுவது, பனை மர பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்  திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  
எப்படி இந்த எண்ணம் உருவானது?

""எனக்கு சிறுவயதில் இருந்தே சமூகப்பணிகளில் ஆர்வம் அதிகம். சிறு வயதிலேயே அப்பா தரும் பணத்தை சேமித்து சாலையோரம் இருப்பவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன். கல்லூரியில இரண்டாம் ஆண்டு படிச்சப்போதான் அந்தப் பயணம் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பனை மரம் பற்றி கேள்விப்பட்டேன். பனை மரம் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர் வற்றாது. மேலும்  மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர். 

பனை விதை சேகரிப்பது, பனை விதை நடவு போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தொடக்கத்தில் என்னுடன் யாரும் வரவில்லை. ஆரம்பத்தில் திருச்சி மணச்சநல்லூர் பகுதியில் 8 பனை மர விதைகளை நட்டேன்.

என்னுடைய சமூகப் பணிகளை அதாவது மரக்கன்று நடுதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தேன்.    அதனைப் பார்த்த பலர் என்னுடன் தன்னர்வலர்களாக இணைந்தனர். இன்று திருச்சி, கடலூர், திருப்பூர் போன்ற இடங்களில் எங்களை சேவை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 5 கோடி பனை மரம் உள்ளதாக கூறுகிறார்கள்.  அதனை 6 கோடி மரங்களாக உயர்த்த அனைவரும் முயற்சி செய்வோம். இதற்காக விதைகளை கொடுக்க நான் தயாராக உள்ளேன்.

எங்களுடைய சேவைகளையெல்லாம் மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்து அதன் மூலம் அதை இன்னும் அதிகரிக்க முடிவு செய்து, சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் யூடியூப் போன்றவற்றுல தினமும் நாங்க செய்யும் பணிகளை பதிவிட ஆரம்பித்தேன். அமைப்பாக மாறுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது அப்போதான்.  "மாறுவோம் மாற்றுவோம்' என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கினேன்.

இயற்கை ஆர்வலர்களுக்கு பனையை விதைக்க ஆர்வம் உள்ளது அவர்களுக்கு விதை கிடைப்பதில்லை. எனவே முடிந்தவரை பனை விதை, மரங்களின் விதைகள், மரக்கன்றுகளை வேண்டுவோருக்கு வழங்கி வருகிறோம். 

சமீபத்தில் தான் முடிதானம் குறித்து எனக்கு தெரியவந்தது. என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார் என்பதை அறிந்தேன். அவர்களுக்கு தலை முடி கொட்டுவதை அறிந்து இப்போது முழுமையாக முடி தானத்தில் இறங்கியுள்ளேன். ஒருவருக்கு 12 இஞ்ச் முடி இருந்தால் தான் சவுரி தயாரிக்க முடியும். இதற்காக என்னுடைய தோழிகள் பலரும் முடி வளர்ந்து தானம் செய்ய தயாராகி வருகிறார்கள். என்னுடைய குழுவிலுள்ள ஆண்களும் அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அனுமதி பெற்று நீளமான முடி வளர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தன் விழிப்புணர்வு செயல்பாடுகளின் மூலம் 35 பேர் வரை புற்றுநோயாளிகளுக்கு முடிதானம் செய்ய வைத்துள்ளார்.

முடி வெட்ட வெட்ட வளர்ந்து விடுகிறது. அதனால் தானமாக கொடுப்பதால் நாம் மேலும் அழகாகத்தான் ஆகிறோம் என்பது நான் என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை. மேலும் சமூக வலைத்தளங்களில் தலைமுடி தானம் செய்ய விரும்புவோர்  தன்னை தொடர்பு கொள்ளலாம்'' என்றும் அறிவித்து இருக்கிறார் சமூக ஆர்வலரான சிந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT