மகளிர்மணி

வைரலாகி வரும் மைனாவின் கெட்டப்!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய "சரவணன் மீனாட்சி' தொடரில் மைனாவாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நந்தினி. இத்தொடருக்கு பிறகு அவரது பெயர் மைனா நந்தினியாகவே ஆகிவிட்டது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "வேலைக்காரன்' தொடரில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நந்தினி.
 சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மைனா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
 இந்நிலையில் தற்போது வயதான கெட்டப்பில் கணவர் யோகேஸ்வருடன் உள்ள போட்டோஷூட் ஸ்டில்களை பதிவிட, அது தற்போது இணையத்தில் பெரியளவில் வைரலாகி வருகிறது.
 இருந்தாலும், சமீபத்தில் விஜய் விருது விழாவில், பங்கேற்ற மைனா, கரோனா காலத்தில் வேலையில்லாமல் போனதால் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியதாகிவிட்டதாகவும். இதனால் குழந்தை பிறந்த 15 நாள்களிலேயே மீண்டும் தொடரில் நடிக்கத் தொடங்கிவிட்டேன் என்றும் உருக்கமாக கூறியிருந்தது. அவரது ரசிகர்கள் இடையே பெரிதும் வருத்தத்தை
 ஏற்படுத்தி உள்ளது.
 - ஸ்ரீ

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT