மகளிர்மணி

வெப் சீரியல் மூலம் மறுபிரவேசம்!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

 முதன்முதலாக 17 வயதில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புக்காக தயாரிக்கப்பட்ட "டாடி' ( 1989) படத்தின் மூலம் அறிமுகமான பூஜாபட், தற்போது 50-ஆவது வயதில் தானே தயாரித்து இயக்கிய "பாம்பே பேகம்ஸ்' என்ற வெப் சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஐந்து பெண்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட "பாம்பே பேகம்ஸ்' ஆறு பகுதியை கொண்ட தாகும். ஒவ்வொரு பகுதியும் ஒரு மணி நேரம் ஒடக் கூடியதாகும். இதில் ராணி என்ற பெண்ணின் பாத்திரத்தில் பூஜாபட் நடித்திருந்தார். சர்வதேச மகளிர் தினத்தன்று ஓடிடியில் வெளியான இத்தொடர் மூலம் மீண்டும் திரையுலகில் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் பூஜாபட்.
 - அருண்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT