மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

கீரையை வேக விடும்போது சிறிது எள் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக இருக்கும்.
* காய்கறிகளை நறுக்கும்போது பெரிய துண்டங்களாகப் போட்டால் அவற்றின் சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.
* அரிசியையோ, பருப்பு வகைகளையோ விரைவாக ஊற வைக்க வேண்டுமென்றால் கை பொறுக்கும் நிலையில் உள்ள வெந்நீரில் ஊற்றி ஊற விட வேண்டும். பிறகு வேகும்போது சீக்கிரம் வெந்துவிடும்.
* ரசம் மீந்துவிட்டால் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து சேர்த்தால் சாம்பார் ஆகிவிடும்.
* கடையில் வாங்கிய ரொட்டித் துண்டுகள் மீதமாகி காய்ந்துவிட்டால் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டால் புத்தம் புதிய ரொட்டித் துண்டுகள் போல ஆகிவிடும்.
* சமோஸாவுக்கு மாவு பிசையும்போது மைதா மாவை சலித்து ஒரு மெல்லியத்துணியால் கட்டி இட்லித்தட்டின் மேல் வைத்து ஐந்து நிமிடங்கள் ஆவியில் வைக்கவும். பிறகு உப்பு, சீரகம், டால்டா போட்டுப் பிசைந்து செய்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.
* தயிர்சாதத்துக்கு சுடச் சுட சாதம் பிசையும்போது அத்துடன் மாவிலை கொழுந்து ஒன்றைச் சேர்த்து பிசைந்தால் தயிர்சாதம் மாங்காய் மணத்துடன் ருசியாக இருக்கும்.
* புட்டுக்கு மாவை வறுப்பதைவிட அரிசியை வறுத்து, மாவாக்கி புட்டு செய்யலாம். புட்டு உதிரி உதிரியாக வரும். கட்டி வராது.
* மோர்க்குழம்பு செய்யும்போது அதில் நிலக்கடலையை அரைத்துக் கலந்தால் மோர்க் குழம்பு சுவையாக இருக்கும்.
- எம்.ராதாகிருஷ்ணன், 
எச்.சீதாலட்சுமி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT