மகளிர்மணி

நன்னாரியின் பலன்கள்!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

நன்னாரி குறுகிய நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இதன் நறுமணம் உள்ள வேர்களே மருத்துவ பயனுடையது. நன்னாரி நறுக்கு மூலம், நறு நீண்டி போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
• தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தானே வளரக்கூடியது. நன்னாரியில் பக்கவிளைவுகள் இல்லை, நன்னாரி என்றாலே சர்பத்துதான் நினைவுக்கு வரும். இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நமக்கு கிடைக்கின்றன.
• நன்னாரி வேரை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர அதிபித்தம் தீரும். நன்னாரி வேரை அரைத்து அதை கற்றாழை சாற்றுடன் சாப்பிட வண்டு கடியினால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளும் தீரும்.
• வேர் சூரணம் அரை கிராம் காலை, மாலை வெண்ணெய்யில் உட்கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும்.
• இதனை தேனில் சேர்த்து சாப்பிட பாண்டு, காமாலை தீரும்.
• நன்னாரி வேரை இடித்து சூரணம் செய்து அதற்கு சம எடை சர்க்கரை சேர்த்து வைத்துக்கொண்டு 35 கிராம் - 50 கிராம் வீதம் 2 வேளை 7 நாட்கள் கொடுக்க செரியாமை, 
அக்கினிமந்தம், வெள்ளை, கீல் பிடிப்பு, பிரமேகம் போன்றவை தீரும்.
• பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
• அரை ஸ்பூன் நன்னாரி வேர் பொடியுடன், 20 உலர்ந்த திராட்சை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இரவு நேரத்தில் குடித்துவர மலச்சிக்கல் சரியாகும்.
• கோடைக்காலத்தில் ஏற்படும் அம்மை, சிறுநீர் எரிச்சல், ரத்த சீதபேதி போன்றவற்றை சரிசெய்யக் கூடிய தன்மை நன்னாரிக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி உடையது.
• வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள எளிய மருந்தாக நன்னாரி பயன்படுகிறது. நன்னாரி வேரை நீர்விட்டு காய்ச்சி அதில் வெல்லம், எலுமிச்சை சாறு கலந்து தயாரிப்பதே நன்னாரி சர்பத். இது கோடை காலங்களுக்கு சிறந்த பானமாக திகழ்கிறது.
- பி. கோபி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT