மகளிர்மணி

நடிகரின் குடும்பத்தில் ஒரு கவிஞர்

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

மலையாள பட உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஷ்மயா, ஆங்கிலத்தில் ஒரு கவிதை நூல் வெளியிட்டுள்ளார். "எழ்ஹண்ய்ள் ர்ச் நற்ஹழ்க்ன்ள்ற்’’ என்பது அதன் பெயர். அதில் தன் கைப்பட வரைந்த ஓவியங்களையும் இணைத்துள்ளார்.
 இந்த புத்தகத்திற்கு, மோகன்லால் முன்னுரை எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல பலர் இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு பாராட்டும் தெரிவித்துள்ளனர். அதில் முக்கியமானவர் அமிதாபச்சன். "மிகச்சிறந்த கற்பனை சக்தியின் பயணத்தை இவரின் பாடல்கள் மற்றும் ஓவியங்களில் கண்டேன். திறமை.. அவர்கள் குடும்பத்து சொத்து' என புகழ்ந்துள்ளார்.
 ஓவியங்கள் பற்றி விஷ்மயா கூறியதாவது:
 "இந்தப் புத்தகத்தில் உள்ள ஓவியங்களுக்கு நான் தலைப்பு ஏதும் இடவில்லை. ஏனென்றால் இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது, ஒவ்வொருவர் ஒவ்வொரு அர்த்தம் கொள்வர் ஆக ஓவியம் சரியா... தவறா என்றெல்லாம் சிந்தித்து வரையவில்லை. மாறாக எனக்கு தோன்றியதை வரைந்தேன். 16 வயதிலிருந்து டைரி எழுதுகிறேன். அதில் ஓவியங்களும் வரைவேன். அவற்றின் தொகுப்புதான் நூலில் இடம் பெற்றுள்ளது'' என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT