மகளிர்மணி

ஜெயாபச்சனின் பிரசாரம்!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

அமிதாபச்சன் 1980-களில் அலகாபாத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். ஆனால் இப்போதும் மோடி மற்றும் அகிலேஷ் யாதவ் போன்றவர்களுடன் நல்ல நட்பில் இருக்கிறார். ஆனால், அவருடைய மனைவி ஜெயாவின் நிலையே வேறு.
 சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து மூன்றாவது முறையாக இருந்து வருகிறார்.
 அத்துடன் சமீபத்தில், மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தார். நல்ல கூட்டமும் வந்தது. இது மம்தாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ இல்லையோ.. சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ்க்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏன்?
 2022 -இல் உத்திரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் வருகிறது. அதற்கு ஜெயாபச்சனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாமே என்றுதான்.
 ஜெயாவின் குடும்பத்தினர் வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 - ராஜிராதா

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT