மகளிர்மணி

சுயசரிதை வெளியிட்ட கமலா ஹாரிஸ்!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தன்னுடைய அமெரிக்க வாழ்க்கை பற்றிய சுயசரிதையை (The  Truths we hold - An American Journey) சமீபத்தில் வெளியிட்டார். 
தனது தாயார் சியாமளா மீது பெரும் மதிப்பு வைத்துள்ள கமலா, அவர் தனக்கு கூறி... காக்கப்பட வேண்டிய கட்டளைகளை அதில் கூறிப்பிட்டுள்ளார். அவை:
* மற்றவர்கள், நீ யார் என சுட்டிக் காட்டும்படி செயல் படாதே, மாறாக நீ யார் என அவர்களுக்குக் காட்டு.
* தவறுக்கான காரணங்களை கண்டுபிடித்து மற்றவரை குற்றம் சாட்டாமல் அதனை மாற்ற முயற்சி செய்.
* சும்மா இராதே... டிவி பார்க்கும்போது கூட, உன் கைகள் சும்மா இராமல் ஊசியைக் கொண்டு செய்யும் பின்னல் வேலைகளை செய்யட்டும்..
* சவால்களை சந்தித்து கடுமையாக உழைத்து அதனை வெற்றி கொள்.
* உன் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறாய்.. செயல்படுத்துகிறாய் என்பதுதான் முக்கியம். அதில் உனக்கு எது முக்கியமோ அதில் கவனம் செலுத்து . தகுதிக்கு எப்பவும் போராடு. மற்றவர்களுக்கு உதவியாய் இரு.
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT