மகளிர்மணி

தமிழகத்தின் 'க்யூப் குயின்'!

31st Mar 2021 06:00 AM | - ரிஷி

ADVERTISEMENT

 

ரூபிக்ஸ் க்யூப் என்னும் கனசதுர விளையாட்டின் எல்லா வண்ணங்களையும் ஒரே பக்க வகைகளில் வரிசைப்படுத்துவது என்பது சாதாரணமான ஒருவருக்கு குறைந்தபட்சம் சில மணி நேரங்களாவது பிடிக்கும். ஆனால், 10 விநாடிகளில் அனைத்து பக்க வண்ணங்களையும் ஒன்று இணைத்து அசத்துகிறார் 19 வயதான சென்ûûயைச் சேர்ந்த லட்சுமி ராஜாராம்.

இவர், சமீபத்தில் ஆன்லைனில் நடைபெற்ற ரெட் புல் ரூபிக்கின் "கியூப் உலகக் கோப்பை 2020'-க்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாடி (பெண்கள் பிரிவில்) வென்றுள்ளார். க்யூப் விளையாட்டில் தனக்கு எவ்வாறு ஆர்வமேற்பட்டது என்பதை லட்சுமி இங்கு விளக்குகிறார்:

""சென்னை பி. எஸ் அப்தூர் ரஹ்மான் கிரசண்ட் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறேன். என் சகோதரன் ரூபிக் க்யூப் விளையாடுவதில் மிகவும் வல்லவர். சிறுவயதில் அவர் விளையாடுவதைப் பார்க்கும்போதெல்லாம் கையில் க்யூப் இல்லாமலேயே என் கைகளும் அவரைப் போலவே அசைந்து கொண்டிருக்கும். இப்படி அவர் விளையாடுவதைப் பார்த்து பார்த்துதான் எனக்கும் க்யூப் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ரூபிக் க்யூப் விளையாட்டில் முழுமையாக இறங்கினேன். ஆரம்பத்தில் என் சகோதரனை ஜெயிப்பதே எனது இலக்காகவும் மிகவும் கடினமானதாகவும் இருந்தது.

இந்நிலையில்தான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு, ரூபிக் க்யூபில் முழுமையான, முறையான பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

அதிலிருந்து க்யூப் என் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்டது. நான் உண்ணும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் தவிர, க்யூப் எப்போதும் என்னுடனேயே இருக்கும். நான் எங்குச் சென்றாலும், அது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதும் சரி அல்லது டிவி பார்ப்பதானாலும் சரி அப்போதும் க்யூப் என் கூடவே இருக்கும். அதைத் தீர்க்க நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.

பின்னர், படிப்படியாக மாநில அளவில், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தொடங்கினேன். அந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம்தான் இன்று உலக கோப்பை போட்டியில் வெல்ல உதவியுள்ளது.

அதுபோன்று, 2019 -ஆம் ஆண்டு உலக அளவில் க்யூப் விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலரை நேரில் சந்திப்பதற்காக சுமார் பத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு பயணம் சென்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

பொதுவாக, ஒரு நாளைக்கு எத்தனை முறை நான் க்யூப் விளையாடுகிறேன் என்பதையும் ஒவ்வொரு முறையும் எவ்வளவு நேரத்தில் வண்ணங்களை சேர்க்கிறேன் என்பதையும் மறக்காமல் தினசரி ஒரு புத்தகத்தில் குறிப்பெடுத்து வைத்து கொள்வேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் நான் இன்னும் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதை அது எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

இப்போது என் சகோதரன் கால்களால் க்யூப் சேர்க்கும் போட்டியாளர்களில் தேசிய அளவில் ஒருவராக இருக்கிறார். அதனால் நானும் கால்களால் க்யூப் சேர்க்க முயற்சித்து வருகிறேன்'' என்றார்.

Tags : தமிழகத்தின்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT