மகளிர்மணி

சின்னச் சின்ன அழகுக் குறிப்புகள்...

31st Mar 2021 06:00 AM |  -சி.ஆர். ஹரிஹரன்

ADVERTISEMENT


முக அழகு பெற தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தைக் கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

புதினாச்சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று முகம் சுத்தமாகவும், வசீகரமாகவும் இருக்கும்.

உதடுகள் வறட்சியானால் வெடித்துப் போகும். இதைத் தடுக்க தினமும் உதடுகளில் வாசலினை தடவிக் கொள்ள வேண்டும்.

பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை கரும்புச்சாறில் ஊற வைத்து அதனுடன் சீரகம் சிறிது உப்பு கலந்து சட்னிப் போல அரைத்து சாப்பிட்டு வர, இளநரை மறைந்துவிடும்.

ADVERTISEMENT

Tags : சின்னச் சின்ன அழகுக் குறிப்புகள்.
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT