மகளிர்மணி

காலிஃபிளவர்  சப்ஜி 

31st Mar 2021 06:00 AM | - லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.

ADVERTISEMENT


தேவையானவை:

காலிஃபிளவர் - 250 கிராம்
பச்சை பட்டாணி - அரை கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
சோம்பு, கடுகு ( தாளிக்க ) - அரை தேக்கரண்டி

செய்முறை:

காலிஃபிளவரை ஆய்ந்து சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெதுவெதுப்பான நீரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சோம்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் . தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு காலிஃபிளவர், பட்டாணி, உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனைப் போன பிறகு நன்கு கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். சப்பாத்தி தோசைக்கு ஏற்ற சப்ஜி இது.
 

ADVERTISEMENT

Tags : காலிஃபிளவர்  சப்ஜி 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT