மகளிர்மணி

வாழைப் பூ குக்கரில் வேக வைக்கலாமா?

31st Mar 2021 06:00 AM | - ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி / எச்.சீதாலட்சுமி,

ADVERTISEMENT

 

கோடையில் அரிசியுடன், வெந்தயம் சேர்த்து ஊற வைத்து பிரஷர் பேனில் வேக வைத்து கஞ்சி செய்து சாப்பிடுங்கள். சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி வரவே வராது.

வாரம் ஒரு முறை தேங்காய்ப் பாலில் பழங்களைப் போட்டு மில்க் ஷேக் செய்து குடியுங்கள். உடம்பு குளுமை அடையும்.

கோடைக்காலத்தில் உணவில் அடிக்கடி வெள்ளரி, தக்காளி, கீரை வகைகள் சேர்ப்பது மிகவும் நல்லது. வெள்ளரியைச் சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மோர் விட்டு கொத்துமல்லி, இஞ்சி, புதினா போட்டு உச்சி வெயிலில் இண்டு கிண்ணம் குடித்தால் உடல் சூடு குறைந்து ஜில்லென்று இருக்கும்.

ADVERTISEMENT

பாலுக்கு உறை ஊற்றும்போது சிறிதளவு அரிசி மாவையும் சேர்த்துக் கலந்தால் தயிர் கெட்டியாக வரும்.

இட்லி மிளகாய்ப் பொடி அரைக்கும்போது கொள்ளையும் சிறிது சேர்த்து அரைத்தால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை அகற்றிவிடும்.

வாழைப் பூவை குக்கரில் வேகவைத்தால் கருத்துவிடும். வாழைப் பூவை சிறிது தயிர் விட்டுப் பிசறி இட்லித்தட்டில் வைத்து வேக வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

ரொட்டி காய்ந்துவிட்டால் நீராவியில் வேக வைத்து பயன்படுத்த புதிய ரொட்டி போல் ஆகிவிடும்.

பிரெட், பன் போன்றவை உலர்ந்து விட்டால் சிறிது தண்ணீரில் நனைத்து நன்றாகப் பிசையவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, வெங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை எண்ணெய்யில் வடைபோல் பொரித்து எடுத்தால் பிரெட் வடை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

வழக்கமாக செய்யும் சப்பாத்தி மாவுடன் துருவி வேக வைத்து மசித்த கேரட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை நன்றாக இருக்கும்.

Tags : வாழைப் பூ குக்கரில் வேக வைக்கலாமா?
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT