மகளிர்மணி

பிரியங்காவின் புதிய அவதாரம்!

17th Mar 2021 06:00 AM | -சக்கரவர்த்தி

ADVERTISEMENT


நடிகை.. நட்சத்திரம்  என்பதையும் தாண்டி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொழில் முனைவோர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ஆம்..! விரைவில் சொந்தமாக உணவகம் ஒன்றைப் பிரியங்கா  தொடங்கவுள்ளார். நியூயார்க் நகரில்.  இந்த மாத  இறுதியில்  உணவகம் திறக்கப்படவுள்ளது!

"சோனா'  என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில் இந்திய உணவு ஐயிட்டங்கள் மட்டுமே  கிடைக்கும்.

"நியூயார்க் நகரில்  இந்திய உணவுப் பிரியர்களுக்காக "சோனா' உணவகத்தைத் திறப்பதில்  மகிழ்ச்சியடைகிறேன். இங்கு இந்திய உணவுவகைகள் புதிய சுவையுடன்  கிடைக்கும்.  உங்கள் அனைவரையும் சோனாவில் சந்திக்கக் காத்திருக்கிறேன்..' என்று வலைத்தளங்களில்  பிரியங்கா பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT