மகளிர்மணி

சீஸ் நூடூல்ஸ் கட்லெட் 

17th Mar 2021 06:00 AM | -லோ.சித்ரா, கிருஷ்ணகிரி  

ADVERTISEMENT

 

தேவையானவை:

சீஸ் துருவியது- 1/4 கிண்ணம்
நூடூல்ஸ் -50 கிராம் 
உருளைக்கிழங்கு-4
பிரெட் - 2 துண்டுகள்
பச்சைமிளகாய் நறுக்கியது -4
கார்ன்  ஃப்ளவர் -2 மேசைக்கரண்டி 
பிரெட் க்ரம்ஸ்- அரை கிண்ணம்
எண்ணெய் பொரிப்பதற்கு 
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ADVERTISEMENT

வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். நூடூல்ûஸ வேக வைத்து நீரை வடித்துக் கொள்ளவும். பிரெட்டைப் பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு நூடூல்ஸ், சீஸ், பச்சை மிளகாய், பொடித்த பிரெட், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். கட்லெட் போல் செய்து கொள்ளவும். இதை  கால் கிண்ணம் கார்ன் ஃப்ளவர் கரைசலில் முக்கி எடுக்கவும். இதை பிரெட் க்ரம்ஸில் உருட்டி எடுத்து காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT