மகளிர்மணி

தினை பருத்திப்பால் 

10th Mar 2021 06:00 AM | -சாந்திராஜா, புதுக்கோட்டை

ADVERTISEMENT

 

ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள்.  இந்த வாரம் சிறுதானிய ஸ்பெஷல்: 

தேவையானவை:

தினை அரிசி மாவு - 50 கிராம்
பருத்தி விதை - 200 கிராம்
கருப்பட்டி - 150 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்தூள் - சிறிது
சுக்குத் தூள் சிறிது

ADVERTISEMENT

செய்முறை:

சுத்தமான பருத்தி விதையை 10 - 12 மணிநேரம் ஊறவைத்து நன்றாக அலசவும். பிறகு அதனைப் பால் பிழிந்து கொள்ளவும் இரண்டு, மூன்று முறை பால் எடுக்கவும்.

கருப்பட்டியை நீரில் கரைத்து வடிக்கட்டி கொதிக்க விடவும் இதனுடன் பருத்திப் பாலை சேர்க்கவும். கொதித்து வந்ததும்,  தினை அரிசிமாவை கரைத்து அதில் ஊற்றவும் நிதானமாக சூட்டில் கைவிடாமல் 3 நிமிடம் கிளறவும். தூள் வகைகளைத் தூவி இறக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT