மகளிர்மணி

சேனைக்கிழங்கு  பட்டாணி சுண்டல் 

சுந்தரி காந்தி

தேவையானவை:

சேனைக் கிழங்கு  - 200 கிராம்
பட்டாணி - 100  கிராம்
கேரட்  -1
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1தேக்கரண்டி
உளுந்து -1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு -1  தேக்கரண்டி

செய்முறை: 

சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். கேரட் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். நறுக்கிய சேனை, பட்டாணியை தனித்தனியே நன்றாக  வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு, வேகவைத்த சேனைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து கிளறவும். பின்னர் கேரட் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.  இது நல்ல சத்தான  சுண்டல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT