மகளிர்மணி

வேப்ப எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்!

பி.கோபி

வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை  தினமும் முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும்.

வேப்ப எண்ணெய்யில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.

வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது.

வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.

சில சொட்டு வேப்ப எண்ணெய்யை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT