மகளிர்மணி

செயல் தலைவராக இந்திய விஞ்ஞானி

DIN

இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க பெண் ஆராய்ச்சியாளர் பவ்யா லால் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பவ்யா லால் அணுசக்தி அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். தொழில்நுட்பம் மற்றும் திட்டம் பற்றிய முதுநிலை அறிவியல் படிப்பும் படித்துள்ளார். பொது கொள்கைத் திட்டம் மற்றும் பொது நிர்வாகம் பற்றி முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

பொறியியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 2005 முதல் 2020 வரை ஆராய்ச்சி உறுப்பினராக செயல்பட்டுள்ளார். 

தேசிய விண்வெளி கவுன்சிலின் வெள்ளை மாளிகை அலுவலகம், நாசா பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட கூட்டாட்சி விண்வெளி சார்ந்த அமைப்புகளுக்கான விண்வெளி தொழில் நுட்பம் மற்றும் கொள்கை பற்றிய பகுப்பாய்வுகளுக்கு பவ்யா லால் தலைமை தாங்கி உள்ளார்.

விண்வெளித்துறையில் பவ்யா லால் செய்த பல பங்களிப்புகளுக்காக, சர்வதேச விண்வெளி அகாதெமியின் கவுரவ உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் பைடனின் நிர்வாக ஆய்வுக் குழுவிலும் இவர் பங்கு கொண்டிருக்கிறார். இது போல பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகித்துள்ள இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி பவ்யா லாலுக்கு  நாசாவின் முக்கிய தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT