மகளிர்மணி

மாம்பழமும் - சுவையும் !

28th Jul 2021 06:00 AM | - ராஜிராதா

ADVERTISEMENT

 

அல்போன்சா மாம்பழத்துக்கு தனி மனம் கிடையாது. அதே சமயம் சதை கெட்டியானது. இதனால் உணவுக்கு பின் சாப்பிடும் பழத்துண்டு டெஸர்ட்களுக்கு இது சிறந்தது.

அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் மட்டும், 50-க்கும் அதிகமான மாம்பழ வகைகள் காய்க்கின்றன. இவற்றில் கிலா, போகி, ஹிர்கோடாமிதா, ஜிர்கட்டா, குலபியா, குரோனியா, பிதார் போகா ஆகியவை குறிப்பிடத்தவை.

அஸ்ஸாமியர் வீடுகளில் மாங்காய் சாம்பார், மாங்காய் சட்னி ரொம்ப பிரபலம்.

ADVERTISEMENT

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மட்டும் காய்க்கும் இமாம்பசந்த், அளவை பார்த்து, கொட்டை பெரியதாக இருக்கும் என எண்ணி ஏமாற வேண்டாம். ஆனால், இந்தப் பழத்தில் நிறைய சத்து உண்டு. சாப்பிடவும் சுவையாக இருக்கும். அதுபோன்று பங்கனபள்ளி, செந்தூரா, மல்கோவா, ரூமானி போன்ற மாம்பழங்களுக்கும் தனி இடம் உண்டு.

மேற்கு வங்காளத்தில் மால்டா ஜில்லாவில் விளையும் லக்மண்யோக் மாம்பழம் மிகவும் பிரபலம். கெட்டியானது அதேசமயம், மென்மையானது. நல்ல நறுமணமும் உண்டு இனிப்பும் கூடுதல் ஆக இருக்கும்.

Tags : magaliarmani Mango - and taste!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT