மகளிர்மணி

ஆப்பிரிக்க 'ஸ்பெல்லிங் பீ'

28th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் நடைபெற்ற "ஸ்பெல்லிங் பீ' எனப்படும் சொற்களுக்கான எழுத்துகளை பிழையின்றி சொல்லும் போட்டியில் முதல் முறையாக ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் "ஸ்பெல்லிங் பீ' போட்டி 93- ஆவது ஆண்டாக ஃ புளோரிடா மாகாணம் பேலேக் நகரில் 8-ஆம் தேதி ஜூலை 2021 அன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது அமெரிக்கச் சிறுமி ஸாய்லா அவன்த் கார்டே முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். 93 ஆண்டுகளாக நடைபெறும் "ஸ்பெல்லிங் பீ' போட்டியில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும் லூசியானாவைச் சேர்ந்த ஒருவர் இந்தப் போட்டியை வெல்வதும் இது முதல் முறையாகும்.

இந்த போட்டியில் சான்ஃ பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த சைத்ரா தும்மலா (12 வயது) இரண்டாவது இடத்தையும் நியூயார்கைச் சார்ந்த பாவனா மதினி ( 13 வயது) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். சைத்ரா தும்மலா, பாவனா மதினி இருவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

ADVERTISEMENT

Tags : magaliarmani Little girl achievement
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT