மகளிர்மணி

பலாக்கொட்டை ஸ்பெஷல்!

28th Jul 2021 06:00 AM | - ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

ADVERTISEMENTதேவையானவை:

பலாக் கொட்டை - 200 கிராம்
உருளைக்கிழஙஅகு - 3
வெங்காயம் - 3
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - 1 பிடி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
ரொட்டித் தூள் - 6 மேசைக்கரண்டி
ரவை - 50 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையானவை

செய்முறை:

பலாக்கொட்டையை வேகவிட்டு அதனுடன் உருளைக்கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைத்து மேலே உள்ள தோலை உரித்துவிட்டு, பலாக்கொட்டையையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து பிசைய வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி விழுது, கரம் மசாலா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் இவைகளைச் சேர்த்துப் பிசைய வேண்டும். பிறகு இதிலேயே ரொட்டி தூள், ரவை இவைகளை சேர்த்து அழுத்திப் பிசைந்து ஒரு சதுர வடிவமான தட்டில் கொட்டி அழுத்தமாகத் தட்டவும். பிறகு நமக்கு தேவையான வடிவில் வெட்டி வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் போட்டு பொன்னிறமாக எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

Tags : magaliarmani jackfruit special
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT