மகளிர்மணி

பலாக்கொட்டை கறி 

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பலாக் கொட்டை - 1 கிண்ணம்
தேங்காய் - 1
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
மிளகாய்வத்தல் - 4
எண்ணெய் , உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பலாக் கொட்டையை வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி பால் எடுக்க வேண்டும். ஒரு மேசைக்கரண்டி அரிசியுடன் தேங்காய்த் துருவல், மிளகாய் முதலியவற்றை வறுத்து அரைக்க வேண்டும். வெங்காயத்தை நறுக்கி தனியாக அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து அரைத்த வெங்காயவிழுதைப் பொன்னிறமாக வதக்க வேண்டும். இதனுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் முதலியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், நறுக்கி வைத்திருக்கும் பலாக் கொட்டை, உப்பு இரண்டையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு தேங்காய்ப் பாலைச் சேர்த்து , அரைத்த விழுதையும் சேர்த்து கொஞ்சம் இறுகிய பிறகு கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி கீழே இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT