மகளிர்மணி

வெண்ணெய் நல்லதா?

28th Jul 2021 06:00 AM | - நெ.இராமன், சென்னை.

ADVERTISEMENT

 

பசு வெண்ணெய் 100 கிராம் சாப்பிட்டால் 729 கலோரி சக்தி உடலுக்கு கிடைக்கும். அதிக நல்ல கொழுப்பு, ஒமேகா 6 இருப்பதால் உடல் வலுவடையும்.

பசு வெண்ணெய்யில் வைட்டமின் ஏ இருப்பதால் பார்வை குறைபாடு, கண் நோய் நீங்கும்.

வெண்ணெய்யில் வைட்டமின் பி12 உள்ளதால் ரத்த சோகை ஏற்படாது. மேலும், உடல் எரிச்சலையும் குறைக்கும்.

ADVERTISEMENT

வெண்ணெய்யில் அடங்கியுள்ள கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கிறது. மேலும் வயோதிகத்தினால் வரக்கூடிய எலும்பு நோய்களை வராமல் தடுக்க உதவுகிறது.

அதிக பசி எடுப்பவர்கள் வெண்ணெய் கலந்த உணவோ அல்லது பட்டர் டீயோ எடுத்துக் கொண்டால் பசி குறையும்.

வறண்ட சருமத்தில் வெண்ணெய்யைப் பூசுவதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் தோல் வெடிப்பு போன்றவை மறையும்.

எடை குறைவுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுக்கலாம்.

காசநோயால் அவதிப்படுபவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயநோய், உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் வெண்ணெய் எடுத்துக் கொள்ளக்கூடாது.

Tags : magaliarmani Is butter good?
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT