மகளிர்மணி

சமையல் டிப்ஸ்..

ஹெச். சீதாலஷ்மி

இட்லி மீந்துவிட்டால் வீணாக்காமல் அதனை உதிர்த்து ஏலக்காய்ப் பொடி போட்டு ஆவியில் வேகவிட்டு சர்க்கரையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்தால் இட்லி புட்டு தயார்.

வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து குலுக்கி வைத்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான, சத்து நிறைந்த ஊறுகாய் ரெடி.

மிருதுவான ஆப்பம் கிடைக்க மாவு ஆட்டும் பொழுது தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப் பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து ஆப்பம் வார்த்தால் சுவையான ஆப்பம் தயார்.

வாழைத்தண்டைப் பொடிப் பொடியாக நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்துள்ள மாவில் போட்டுப் பிசைந்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைத்தண்டு பக்கோடா கிடைக்கும்.

கொத்துமல்லி, புதினா துவையல் அரைக்கும்போது தண்ணீர்விடாமல் கொஞ்சம் தயிர்விட்டு அரைக்கவும். இதனால் துவையலின் நிறம் மாறாது. சுவையும் அபாரமாக இருக்கும்.

கோதுமை அல்லது மைதாமாவில் தோசை வார்க்கும்போது வெங்காயத்தை நறுக்கி நெய்யில் வதக்கி தோசையின் மேல் தூவவும் தோசை சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

தேங்காய் சட்னி அதிகமாகிவிட்டால், சிறிது புளித்த மோர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, பொரித்த அப்பளங்களை உடைத்துப் போடுங்கள். சுவையான மோர்க்குழம்பு ரெடி.

இஞ்சியைத் துருவி வெயிலில் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டால் டீ, குருமா, பொங்கல் என்று இந்தப் பவுடரைச் சேர்க்க மணத்துக்கு மணம். உடம்புக்கும் நல்லது.

வாழைக்காயின் காம்புப் பகுதியை தண்ணீரில் முழ்கும்படி வைத்தால் வாழைக்காய் மூன்று நாள்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

ரவா லட்டு செய்யும்போது சர்க்கரை சுவைக்கு கால் பங்கு பால் பவுடர் சேர்த்துக் கொண்டால் லட்டு சுவை பிரமாதமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT