மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: பன்முக வித்தகி!

28th Jul 2021 06:00 AM | - பொ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT


சின்னத்திரை, பெரியதிரை, சமூக நலப்பணி, எழுத்துப்பணி என பல தளங்களில் பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை ரேகா நாயர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் என் சொந்த ஊர். ஒரு ஏக்கரில் வாழை, தென்னை, நெல், ரப்பர் தோட்டத்துடன் கூடிய சிறிய தரவாடு வீட்டிலிருந்தேன். என் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் கட்டுரை, ஒவியம், நடனம், நடிப்பு, கவிதை என்று வாழ்க்கை நகர்ந்தது. ஓராண்டில் சுமார் 25சான்றிதழ்களை வாங்கி இருக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், முதன் முறையாக கலைஞர் கருணாநிதியின் கையால் நான் வாங்கிய சான்றிதழைப் பார்த்து என் அப்பா கண்ணீர் விட்டதும், அவரைப் பார்த்து நான் அழுததும் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுபோன்று அப்துல் கலாமோடு சந்தித்து பேசிய 30நிமிடங்கள் என்னுடைய வாழ்க்கையில் பொற்காலம்.

இயலாத மக்களுக்கு 10ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை சேவை செய்து கொண்டிருக்கிறேன். எச்.ஐ.விமற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் இதர நோய்வாய்ப் பட்டவர்கள், முதியோர் இல்லங்கள், தனியாக வாழும் பெண்கள் இப்படி எல்லாரையும் சென்று பார்த்து அவர்களோடு என் நேரத்தை செலவு செய்து வருகிறேன். இதை நான் சமூக சேவையாக பார்ப்பதை விட என் கடமையாக நினைக்கிறேன். இதைப்பற்றி நான் இதுவரை எங்கும் சொன்னதுமில்லை, சொல்ல விரும்பியதும் கிடையாது. இதுபோன்ற உதவிகள் செய்கிற பொழுது என் மனதில் தோன்றும் ஒரே எண்ணம், நாளை எனக்கும் இதே நிலைமை ஏற்படலாம் என்பது மட்டும்தான்.

ADVERTISEMENT

இலக்கிய உலகில் 13ஆண்டு கால பயணத்தில் இப்போதுதான் ஒரு புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறேன். மிக விரைவில் வெளிவரவுள்ளது.

சினிமாத்துறையில் "கதகளி', "போக்கிரிராஜா', "தெறி', "பகரி' உள்பட 7படங்களில் நடித்துள்ளேன். மேலும், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பார்த்தீபன், எழில் போன்றோருடன் நடித்துள்ள 5படங்கள் திரைக்கு வரவுள்ளன.

சின்னத்திரையில் "ஆண்டாள் அழகர்', "பகல் நிலவு', "நாம் இருவர் நமக்கு இருவர்', "பைரவி', "வம்சம்' "பேரழகி", "ஓவியா' என 10-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறேன்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "பூவே உனக்காக' மற்றும் ஜீ தமிழில் "ராஜா மகள்' போன்ற தொடர்களில் நடித்து வருகிறேன்.

Tags : magaliarmani multiface actress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT