மகளிர்மணி

கத்தரிக்காய் தொக்கு 

லோ. சித்ரா


தேவையானவை:

பெரிய கத்தரிக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
புளி - 1 எலுமிச்சை அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

கத்தரிக்காயின் மீது எண்ணெய் தடவிச் சுட்டு எடுக்கவும். பின்னர், கத்தரிக்காயின் தோலை உரித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பைச் சிறிதளவு எண்ணெய்யில் வறுத்துப் பொடி செய்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர், கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பொங்கி வரும் சமயத்தில் பிசைந்து வைத்திருக்கும் கத்தரிக்காய் விழுதைச் சேர்த்து கலக்கி கொதிக்கவிட்டு இறக்கி விடவும். கொத்துமல்லியை இறுதியாக சேர்க்கவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT