மகளிர்மணி

சமையல் பொருள் வீணாகாமல் இருக்க..

தொண்டி முத்தூஸ்

உடைத்தகடலை நீண்ட நாட்கள் நமத்துப் போகாமல் வைத்திருக்க வாங்கியவுடன் மூன்று நிமிடம் லேசாக வெறும் வாணலியில் போட்டு வதக்கி பின்னர் ஸ்டோர் செய்து வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் நமத்து போகாது.

அரிசி மற்றும் பருப்பு வகைகளை நீண்ட நாள்கள் வண்டு தொல்லையிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க அதை சேமிக்கும் கலனில் ஒரு துண்டு வசம்பு போட்டு பின் அதன் மேல் அரிசி மற்றும் பருப்புகளை போட்டு வைத்தால் போதும் எவ்வளவு நாள்கள் ஆனாலும் வண்டுகள் பிடிக்காது.

புளி தண்ணீர் விட்டது போல ஆகி விடுகிறது என்றால் புதிதாக புளி வாங்கும் சமயத்தில் சிறிதளவு கல் உப்பு போட்டு அதன் மீது புளியை வைத்து ஸ்டோர் செய்தால் நீண்ட  நாள்களுக்கு உலர்ந்து இருக்கும்.

நீங்கள் தினமும் சாப்பாடு செய்ய பயன்படுத்தும் புழுங்கல் அரிசியில் எறும்பு, வண்டுகள் வராமல் இருக்க நான்கைந்து பிரிஞ்சி இலைகளை பொட்டு வையுங்கள்.

நெய் கெட்டு விடாமல் இருக்க ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்து வையுங்கள். அதன் நிறமும், மணமும்  நீண்ட நாள்களுக்கு அப்படியே  ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

பெருங்காயத்தை கட்டி தட்டாமல் நீண்ட நாள்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க பெருங்காயத்தூள் வைத்திருக்கும் டப்பாவில் காம்புடன் கூடிய ஒரு பச்சை மிளகாயை போட்டு வையுங்கள்.

கோதுமை மாவு, கடலை மாவு என்று எந்த வகையான மாவு பொருட்களும் நீண்ட நாள்களுக்கு கெட்டுப் போகாமல், வண்டுகள் வராமல் இருக்க சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம்.

சப்பாத்தி மாவை பிசைந்து வைப்பவர்கள் அதை காய்ந்து போகாமல் இருக்க சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் மேல்புறமாக நன்கு தடவி அதன் பின் ஈரத்துணியை வைத்து மூடி வைத்தால் போதும் எவ்வளவு நேரமானாலும் காய்ந்து போகாமல் இருக்கும், சப்பாத்தியும் சாஃப்டாக வரும்.

வாழைக்காய் பஜ்ஜி செய்யும் பொழுது நிறம் மாறாமல் இருக்கவும், உப்பு பிடிக்கவும் வாழைக்காய்களை வெட்டிய பின்பு உப்பு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் பஜ்ஜி போட்டால் சூப்பராக வரும்.

இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும் பொழுது பொதுவாக இஞ்சி தான் அதிகமாக சேர்ப்பார்கள். ஆனால் இஞ்சியை விட பூண்டை இரண்டு மடங்கு அதிகம் சேர்த்து பாருங்கள் உணவின் ருசி கூடும். நீண்ட நாள்களுக்கு கெட்டுப் போகாமலிருக்க அதில் உப்பு கொஞ்சம் சேர்த்து கலந்து வையுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT