மகளிர்மணி

வினிகர் இருக்க  கவலை எதற்கு?

7th Jul 2021 06:00 AM | - எச். சீதாலட்சுமி

ADVERTISEMENT

 

சமையலறை அலமாரியின் தட்டுகளை வாரம் இருமுறை வினிகர் கலந்த நீரால், துடைத்து வந்தால் பூச்சித் தொல்லைகள் அறவே நீங்கிவிடும்.

சமையல் பாத்திரங்களிலுள்ள ஸ்குரு துருப்பிடித்துக் கொண்டால் வினிகரை இரண்டு சொட்டுவிட்டு சிறிது நேரம் கழித்துத் திருகினால் ஸ்குருவை சுலபமாக கழட்ட முடியும்.

எவர் சில்வர் பாத்திரங்கள், குளியல் அறையில் இருக்கும் பிளாஸ்டிக், கண்ணாடி பாத்திரங்களை வினிகரால் சுலபமாக சுத்தம் செய்யலாம்.

ADVERTISEMENT

வினிகருடன் சாக் பவுடரைக் கலந்து பூசி வாஷ் பேசினைக் கழுவினால் கறை நீங்கி வாஷ் பேசின் பளிச்சிடும்.

அலுமினியக் குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரை தடவி 15 நிமிடங்கள் கழித்து சிறிது நீர் மாற்றி கொதிக்கவிட்டால் கறை நீங்கி குக்கர் பளிச்சிடும்.

ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி வினிகர் கலந்து பிரிட்ஜைத் துடைத்தால் கறைகள், நீங்கி, வாடை போய் பிரிட்ஜ் பளிச்சென்று ஆகிவிடும்.

வெற்றிலைக் கறை துணியில் பட்டால் அந்த இடத்தில் வினிகரை ஊற்றித் தேய்த்துக் கழுவினால் கறை மறைந்துவிடும்.

புதிய பாத்திரங்களில் உள்ள விலை ஸ்டிக்கர் மீது சிறிது வினிகர் தடவி ஊறியதும் எடுத்தால் எளிதில் வந்துவிடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT