மகளிர்மணி

சிறுத்தையை விரட்டிய  மூதாட்டி!

7th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

 

கேரள மாநிலம், இடுக்கியில் ஒரு மூதாட்டி சிறுத்தையை தீப்பந்தத்தால் விரட்டியடித்துள்ளார். இடுக்கி மாவட்டம், மறையூர் அருகே உள்ள காந்தளூர் பாம்பன்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜானி. அவரது மனைவி 69 வயது உடைய ராஜம்மாவின் வீடு வனப்பகுதி அருகே உள்ளது.

ஜானி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராஜம்மா தனியாக வசித்து வருகிறார். தனக்கு துணையாக ஒரு நாயை வளர்த்து வருகிறார். இரவு நேரம் பார்த்து ராஜம்மா வளர்க்கும் நாய் பயங்கரமாக குறைத்தது. உடனே ராஜம்மா வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுத்தை நாயை கடிக்க முயன்று கொண்டு இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜம்மா வீட்டில் இருந்து தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சிறுத்தையை தாக்கினார். சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT