மகளிர்மணி

 மல்டி  வெஜ்   பனீர்  மசாலா 

7th Jul 2021 05:00 AM

ADVERTISEMENT

 

தேவையானவை:

முட்டை கோஸ் - 100 கிராம்
கேரட் - 2
பீட்ரூட் - 1
காப்சிகம் - 1
பச்சைப்பட்டாணி - 2 மேஜைக்கரண்டி
பனீர் - 50 கிராம்
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - தலா அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லித் தழை - சிறிது

செய்முறை:

ADVERTISEMENT

முட்டை கோஸ், கேரட், பீட்ரூட், காப்சிகம் இவைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் போதிய அளவு நீர் சேர்த்து நறுக்கிய காய்கள், பச்சை பட்டாணி சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். கலவை நன்கு வெந்து மசாலா வாசம் வந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும். பின்னர், கொத்துமல்லித் தழையை தூவவும். மல்டி வெஜ் பனீர் மசாலா ரெடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT