மகளிர்மணி

ஆரோக்கியத்துக்கு உதவும் இரும்புச்சத்து!

27th Jan 2021 06:00 AM | - பொன். பாலாஜி

ADVERTISEMENT

 

சத்துகளில் மிக முக்கியமானது இரும்புச்சத்து. சத்துப் பற்றாக்குறை பலவிதமான நோய்களை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு ஆண்களை விட இரும்புச்சத்து அதிகளவு தேவைப்படுகிறது. உடலுக்கு தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்யும் செயலில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை ஈடு செய்வதற்கு இரும்புச்சத்து பெண்களுக்கு அவசியமாகிறது.  உடலில் உள்ள இரும்புச்சத்தில் 70 விழுக்காடு ஹீமோகுளோபினின் ரத்த சிவப்பணு மற்றும் மியோகுளோபினின் தசை செல்களிலும் காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை நுரையீரல் மூலமாக பிற திசுக்களுக்கு எடுத்துச்செல்ல ஹீமோகுளோபின் அவசியமானதாகும்.

இரும்புச்சத்து குறைபாட்டால் ஹீமோகுளோபின் செயல்பாடுகள் பாதிப்பிற்கு உள்ளாகி, ரத்தசோகை பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உடலின் சோர்வு, தலைசுற்றுவது, மூச்சுத்திணறல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, தலைவலி, கூந்தல் வறட்சி, கால்களில் நடுக்கம், பதற்றம், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. முடி உதிர்வது மற்றும் சருமம் வெளிர் நிறத்திற்கு மாறுவது போன்ற பிரச்னையும் ஏற்படும்.

ADVERTISEMENT

பெண்களில் தாய்மை அடையும் பெண்கள் இரும்புச்சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், மேற்கூறிய பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும். ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய தேவையான இரும்புச்சத்து இல்லாத பட்சத்தில், ரத்தசோகை பிரச்னை ஏற்படும். சருமத்தில் வறட்சி, அரிப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு உடல் மாறுதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். மேலும், நகங்கள் உடைதல், வெடித்தல், உடல் வலுவிழப்பு, உடல் சோர்வு, கருவளையம் போன்ற பிரச்னையும் ஏற்படும். இரும்புச்சத்து வழங்கும் நட்ஸ் வகைகள், பயறு வகைகள், பீன்ஸ், கீரைகள், சிறு தானியங்கள் போன்றவற்றை பெண்கள் சாப்பிட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT