மகளிர்மணி

காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

27th Jan 2021 06:00 AM | -ஏ.எஸ். கோவிந்தராஜ்

ADVERTISEMENT


வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டுப்பகுதி சிறுத்தும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.

வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கை காய்

சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்.

ADVERTISEMENT

மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது நல்ல மக்காச்சோளம்.

தக்காளி: தக்காளி நல்ல சிவப்பாக இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்.

சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்.

குடை மிளகாய் : தோல் சுருங்காமல் ஃப்ரெஷாக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிறக் குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்.

காலிஃபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

மாங்காய்: தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டிப் பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டைச் சிறிதாக இருக்கும்.

பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது.

புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதைப்பகுதி அதிகமாக இருக்கும்.

உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்.

கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்.

சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாகப் பார்த்து வாங்கவும்.

பெரிய வெங்காயம்: மேல் பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.

கத்திரிக்காய்: தோல் மென்மையாக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்.

பீன்ஸ்: பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் மென்மையாக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.

அவரை:  தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது.

பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது.

வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்.

மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்.

செüசெü : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாதபடி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்.

முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு - நல்ல காய்.

வெள்ளரி: மேல் பகுதியில் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT