மகளிர்மணி

புருஸ்லீ  பற்றி  அவரது  மகள்  எழுதிய  சுயசரிதை!

DIN


சான்பிரான்சிஸ்கோவில்  உள்ள சைனா டவுனில் பிறந்த  என்னுடைய  தந்தை புருஸ்லீ 1973  -   ஆம்  ஆண்டு  ஜூலை  20 -  ஆம் தேதி சாப்பிட்ட  உணவு விஷமாகி  32  வயதில் இறந்தபோது  எனக்கு 6 வயது.  அவர்  இறப்பதற்குள்  25 படங்களில்  நடித்திருந்தார்.  

என்னுடைய  சகோதரன்  பிராண்டனும்,  அப்பாவை  போலவே  மார்ஷல்  ஆர்ட் பயிற்சிப் பெற்று  படங்களில்   நடித்துக் கொண்டிருந்தபோது,  ஒரு படத்தில்  எதிராளிகள்  துப்பாக்கியால்  சுடும் காட்சியில்,  உண்மையான குண்டு  பாய்ந்து  அவன்  28  வயதிலேயே  இறந்து போனது என் வாழ்க்கையில்  ஏற்பட்ட  இன்னொரு  அதிர்ச்சியாகும்.

அமெரிக்காவில்  இப்போதுள்ள  வெறுப்புணர்வு  நீண்டகாலமாகவே இருக்கிறது  என்பதற்கு  இந்த இரு மரணங்களே சாட்சியாகும். என் அப்பா  இறந்தபோது  அவர் எழுதி வைத்திருந்த  கட்டுரை,  குறிப்புகள்,  ஆவணங்கள்  அடிப்படையில்,  1971 -    ஆம் ஆண்டு  அவர் தொலைக்காட்சி  ஒன்றுக்கு  பேட்டி  அளித்தபோது  கூறிய  "பி வாட்டர்  மை  பிரண்ட்'  என்ற வாக்கியத்தையே  தலைப்பாக  வைத்து  அவரது  சுயசரிதையை  எழுதியுள்ளேன்''  என்று கூறும்  புரூஸ்லீயின் மகள்  ஷனான் லீ,  இந்தப் புத்தகத்தில்  பல சுவாரசியமான  தகவல்களை  எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

SCROLL FOR NEXT