மகளிர்மணி

புதுப்பானையில் பொங்கல் வைக்கும் முன் செய்ய வேண்டியவை!  

DIN

பொங்கல் வைக்கும் புதுப்பானையில் இரண்டு நாள்கள் அரிசி களைந்த நீரை ஊற்றி வைத்து, பொங்கலன்று சுத்தம் செய்துவிட்டு பொங்கல் வைத்தால் மண்வாசனை இருக்காது. பானையிலும் விரிசல் விழாது.

வெல்லப் பொங்கல், கல்கண்டு பொங்கல் செய்வதாக இருந்தால் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து பிறகு செய்யவும்.

சர்க்கரைப் பொங்கல்  செய்யும்போது வெல்லத்தைப் பாகாக காய்ச்சி  பொங்கலில் சேர்த்தால் சுவையாக இருக்கும். 

கல்கண்டு பொங்கல் செய்யும்போது கல்கண்டை நசுக்கி கம்பிப் பதத்தில் காய்ச்சி வெந்த சாதத்தில் சேர்த்து  செய்தால் பொங்கல் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

அரிசி, பருப்பு, காய்கறிகளுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின்னர், முந்திரி, மிளகு, சீரகம்,  மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், இஞ்சித் துருவல் இவற்றை நெய் அல்லது எண்ணெய் விட்டு தாளித்து வெந்த பொங்கலில் சேர்த்தால் சுவையான காய்கறிப் பொங்கல் தயார்.

பாசுமதி அரிசியை வெறும் சட்டியில் வறுத்து குழைய வேகவிட்டு எடுக்கவும். இதில் வெல்லப்பாகு, அரை கப் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விடவும். இறக்கி ஏலப்பொடி தூவவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்த்தால் பாசுமதி அரிசிப் பொங்கல் ரெடி.

அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்து வடிகட்டவும். அதில் அன்னாசி சாறு சேர்த்து நன்றாக குழைய வேகவிடவும். நன்கு வெந்ததும் சர்க்கரைப் பாகு  சேர்த்து. எல்லாவற்றையும்  நன்கு கிளறி கொதிக்கவிட்டு அதனுடன் ஃபுட் கலர், ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால் அன்னாசி பொங்கல் தயார்.

கரும்புச் சாறை கொதிக்க விட்டு வடி கட்டி அதை பொங்கலில் சேர்த்தால் கரும்புச்சாறு பொங்கல் தயார். கரும்புச் சாறை ரசத்தில் கலந்தாலும் சூப்பராக இருக்கும் .

வெல்லம் சேர்த்து செய்யும் பாயசத்துக்கு தேங்காய்ப் பால் சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்துச் செய்யும் பாயசத்துக்கு பால் சேர்க்க வேண்டும்.

பொங்கல் சமையலில் பச்சைப் பட்டாணி இடம் பெறும். பட்டாணியை சிறிது சர்க்கரை சேர்த்து வேகவைத்தால் பட்டாணியின் நிறமும் மாறாது. சுவையும் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT